Thursday, December 31, 2009

காத்திருப்பேன்.


கடுமைகளும் வெறுமைகளுமான என் உலகம்
பசுமைகளை ஏற்கவில்லை.
பாலைவனங்களின் வெம்மையில் இருக்கிறது
எனக்கான குளுமை.
யாருமில்லாத தனிமைகளில் இருக்கிறது
எனக்கான ஆர்பாட்டம்.
முகம் தெரியாத கூட்டங்களுக்கு மத்தியில் இருக்கிறது
எனக்கான தனிமை.
முட்களின் பாதைகளில் இருக்கிறது
எனக்கான மென்மை.
நடந்து வந்த தூரங்களில் என் பாதம் சிந்திய குருதி
என்னை குதூகலிக்க செய்கிறது.
இன்னும் என் குருதி சிந்தட்டும்.
மேலும் பல முட்கள் குத்தட்டும்.
மென் மேலும் என்னுள் வெம்மை ஏறட்டும்.
இன்னும் வலுவாய் இந்த களி மண் மிதிபடட்டும்.
மேலும் மேலும் காத்திருக்கிறேன்
என் நெஞ்சில் இறங்க போகும் ஆணிகளுக்காக.
இந்த வாழ்வு முடிந்து இன்னொரு வாழ்விருந்தாலும்
காத்திருப்பேன்.
உருபெற போகும் ஒரு மாபெரும் வடிவத்திற்கு...

6 comments:

  1. வடிவேல் முதல் கவிதையே சிறப்பாக இருக்கிறது. உருபெறப்போகும் உங்கள் சிறப்பான கவிதைகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்கள் கவிதையை சிறப்பு என்பதைவிட நீங்கள் மிக சிறப்பானவர் என்று சொல்வதே சிறந்தது

    மென் மேலும் என்னுள் வெம்மை ஏறட்டும்.
    இன்னும் வலுவாய் இந்த களி மண் மிதிபடட்டும்.

    நான் நல்ல குயவன் என்பதை கூறவிரும்புகிறேன்

    ReplyDelete
  3. நன்றி என்றுரைப்பது தவிர வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  4. வலிகள் மனிதத்தை பெருமிதப்படும் விதத்தில் உயர்த்தும் என்பது சத்தியமான வார்த்தைகள்...

    ReplyDelete