Monday, February 14, 2011

பிணத்தோடு ஒரு பயணம்

பிரிந்து போன உன்னை எதேச்சையாய்
ஒரு சாவு வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
பிணத்தின் அருகே அழுது கொண்டிருந்தாய்...
கண்ணீர் தேங்கிய கண்களுடன் எனை நீ பார்த்தபோது,
அழுவதற்கு தொடங்கிய எனது கண்கள்
கண்ணீரை கரை போட்டு தடுத்துவிட்டது...
அழாதே என்று நீ யாருக்கோ ஆறுதல் கூறியபோது,
மறந்தும் இங்கு கண்ணீரை கொட்டிவிடாதே என்று
எனது கண்களுக்கு கட்டளை போட்டுகொண்டிருந்தேன்...
கல்லறை செல்லும் காரிய வீட்டில்
மெல்ல புதைந்த உன் நினைவுகள் அனைத்தும்
தோண்டி எடுக்கப்பட்டது...
எல்லா சடங்குகளும் முடிந்து
பிணத்தின் கல்லறை பயணம் துவங்கியது...
இடுகாடு வர நீ தயங்கி நின்றாய்...
பிணத்தோடு நான் பயணம் போனேன்
முற்றும் நினைவுகளை புதைத்துவிடும் மனதோடு...

1 comment:

  1. நீர் கோர்த்த கண்கள்.நிலை தடுமாறும் நெஞ்சம். இறந்த காதலை,இழவு வீட்டில் தோண்டிப் புதைக்கின்றன நினைவுகள்... அருமை!

    ReplyDelete