Tuesday, February 15, 2011

சொல்லாத காதல்.


கூடு தொலைத்த பறவையின்
பரிதவிப்பாய் திக்கி திணறுகிறது
யாரிடமும் சொல்லாத காதல்...

Monday, February 14, 2011

பிணத்தோடு ஒரு பயணம்

பிரிந்து போன உன்னை எதேச்சையாய்
ஒரு சாவு வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
பிணத்தின் அருகே அழுது கொண்டிருந்தாய்...
கண்ணீர் தேங்கிய கண்களுடன் எனை நீ பார்த்தபோது,
அழுவதற்கு தொடங்கிய எனது கண்கள்
கண்ணீரை கரை போட்டு தடுத்துவிட்டது...
அழாதே என்று நீ யாருக்கோ ஆறுதல் கூறியபோது,
மறந்தும் இங்கு கண்ணீரை கொட்டிவிடாதே என்று
எனது கண்களுக்கு கட்டளை போட்டுகொண்டிருந்தேன்...
கல்லறை செல்லும் காரிய வீட்டில்
மெல்ல புதைந்த உன் நினைவுகள் அனைத்தும்
தோண்டி எடுக்கப்பட்டது...
எல்லா சடங்குகளும் முடிந்து
பிணத்தின் கல்லறை பயணம் துவங்கியது...
இடுகாடு வர நீ தயங்கி நின்றாய்...
பிணத்தோடு நான் பயணம் போனேன்
முற்றும் நினைவுகளை புதைத்துவிடும் மனதோடு...

Wednesday, January 26, 2011

ஒரு வார்த்தைக்காக

இரு இமைகளும் இறுக்க மூடி கிடக்கிறது
ஒருங்கிணைந்த வர்ண கூட்டமொன்று
நரம்பு மண்டலங்களை தாக்குகிறது.
வர்ணசுமைகள் நரம்பில் ஏறி
நெற்றி புடைக்க பற்களை கடிக்கிறேன்.
என் சிரசின் இறுக்கத்தில்
கைவிரல்கள் மூடி கொள்கிறது.
என் குருதி , புக இடமின்றி
கண்களின் நரம்புகளைஆக்கிரமிக்கிறது.
என் நா சொல்லை மறந்து
தண்ணீருக்கு தவிக்கிறது.
இரண்டு கால்களையும்
இருக்க கட்டி விட்டது போல்
அசைய மறுக்கிறது.
உள்ளிருந்து ஒரே ஒரு
குரலுக்காக மட்டுமே
காத்திருக்கிறேன்.
வேறு யார் குரலும் அல்ல
என் குரல் தான்.
வேறு எந்த வார்த்தையும் அல்ல
"எழுந்திரு" என்ற ஒரு வார்த்தைகாகத்தான்.

Tuesday, January 25, 2011


உள்ளுக்குள் சேமித்த வாழ்க்கை நினைவுகளை

ஒருவருக்கேனும் சொல்ல காத்திருக்கும் பழைய வீடுகள்

முதுமை மனிதர்களை போலவே..